Entertainment

வாந்தியை சுத்தம் செய்த கே.ஜி.எஃப் பிரபலம்! வார்த்தை கூற முடியாத கஷ்டம்


இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்த ரவீணா டாண்டன் தான் கடந்த வந்த கஷ்டம் குறித்து கூறியுள்ளார்.

கே.ஜி.எஃப்

இந்திய அளவில் பயங்கர ட்ரணடாகிய படம் கே.ஜ.எஃப் 2. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி என பலர் நடித்துள்ள இப்படம் வெறும் 7 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தில் பிரதமர் வேடத்தில் ரமிகா சென்னாக தோன்றி தன்னுடைய மிரட்டலான நடிப்பால் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளவர் பிரபல ஹிந்தி நடிகை ரவீணா டாண்டன்.

தாறுமாறாக நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் டீ! ஈஸியாக தயாரிக்கலாம் 

நடிகை ரவீணா டாண்டன்

ரவீனா டாண்டன் விளம்பரத் திரைப்பட தயாரிப்பாளர் பிரஹலாத் கக்கரின் அலுவலகத்தில் பயிற்சியாளராக தனது பயணத்தை எவ்வாறு தொடங்கினார் என்பதைப் பற்றி பேசியுள்ளார்.

“நான் ஸ்டுடியோ தளங்களின் தரையை துடைப்பது முதல் ஸ்டால்கள் தரைகளையும் சுத்தம் செய்துள்ளேன். சில சமயங்களில் அங்குள்ள வாந்திகளையும் சுத்தம் செய்துள்ளேன்.


நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது பிரஹலாத் கக்கருக்கு உதவி செய்தேன். அந்த நேரத்தில் சிலர் திரைக்குப் பின்னால் என்ன நீ செய்கிறாய், திரைக்கு முன்னால் இருக்க வேண்டிய ஆள் நீ, அதுதான் உனக்கு பொருந்தும் என கூறுவார்கள்.

ஆனால் அப்போது நான் ‘இல்லை, நான் நடிகையா ஒருபோதும் இல்லை’ எனக் கூறி வந்ததோடு, நடிகையாவேன் என்று நான் ஒருபோதும் நினைத்தது கூட இல்லை.

முதலில் மாடலிங் துறையில் இருந்த எனக்கு நடிப்புப் பயிற்சியோ, நடனப் பயிற்சியோ, டயலாக் டெலிவரி பயிற்சியோ இல்லை. நான் தானாக பயிற்சி பெற்று பரிணாமம் அடைந்தேன் படங்களில் நடித்து தான் அனைத்தையும் கற்றுக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.





Supply hyperlink

Leave a Reply

Your email address will not be published.