Entertainment

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?


இன்றைய காலத்தில் நிறைய பேர்கள் நீரிழிவு நோயால் பாதிப்படைந்து வருகின்றனர்.



நீரிழிவு நோயை முழுவதும் குணப்படுத்தும் வகையில் எந்த சிகிச்சையும் இல்லை. நீரிழிவு நோயை நம்மால் கட்டுப்படுத்தவே முடியும்.



ஒரு ஆய்வின்படி தயிர் போன்ற புரோபயாடிக் உணவுகள் நீரிழிவு நோய்க்கு சிறந்தது என்று கூறப்படுகிறது.


தயிர் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவாகும்.

இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது.

தினமும் தயிர் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது.

இதன் மூலம் டைப் 2 வகை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும்.

நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் ‘பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது.

உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.

கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது.


தயிருக்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. சுவையிழந்த நாக்கிற்கு சுவை ஊட்டும்.

குளிருடன் கூடிய முறைக் காய்ச்சல், நீர்ச் சுருக்கு போன்ற நோய்களுக்கு தயிர் பயன்படும். தயிருக்கு இது போன்ற சில குணங்கள் இருந்தபோதிலும் அதைப் பயன் படுத்தும்போது நிறைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

  ​நீரிழிவு நோயாளி எவ்வளவு தயிர் சாப்பிடலாம்



நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அதிகமாக சேர்க்கப்பட்ட தயிர் எடுத்து கொள்ள வேண்டாம். குறைந்த சக்கரை உள்ள தயிரை தெரிவு செய்து உண்ணுங்கள்.



10-15 கிராம் கார்ப்ஸ் மற்றும் 9 கிராம் சர்க்கரை கொண்ட குறைவான தயிரை எடுத்துக் கொள்ளுங்கள்.


கிரேக்க தயிர் மற்ற தயிரை காட்டிலும் இருமடங்கு தண்ணீரைக் கொண்டுள்ளது. புரோபயாடிக் தயிர் பாக்டீரியாக்களை கொண்டுள்ளது.

லாக்டோஸ் இல்லாத தயிர் கூட கிடைக்கின்றன. தாவர அடிப்படையிலான தயிர் (சோயா, முந்திரி, ஓட்ஸ், தேங்காய் பால், பாதாம் மற்றும் ஆளி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது).



ஆடுகளின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் லாக்டோஸ் குறைவாகவும் கால்சியம் அதிகமாகவும் கொண்டுள்ளது. எனவே தயிரை ஸ்மூத்தி, கிச்சடி போன்றவற்றில் சேர்த்து வாருங்கள்.    

Gallery



Supply hyperlink

Leave a Reply

Your email address will not be published.